/* */

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் தனியார் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா மற்றும் 18ம் ஆண்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் தனியார் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா மற்றும் 18ம் ஆண்டு விழா நடைபெற்றது.

சமூகநீதி வரலாற்றில் பெண்கள் பயணித்த தூரம் சாதாரண தூரம் இல்லை பிற சமூக பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் 3 மடங்கு நெருக்கடியை சந்திக்கிறார்கள். மொழியால், சாதியால் மாறுபட்டாலும் உள்ளத்தால் அனைவரும் இணைய வேண்டும். நெல்லை தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு.

நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் தனியார் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா மற்றும் 18ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். 295 இளங்கலை மாணவர்கள், 9 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 304 மாணவர்கள் விழாவில் பட்டம் பெற்றனர்.

விழாவில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில்:- பட்டமளிப்பு விழா என்பது உங்களை கடலுக்குள் தள்ளுவது போன்று. கடலுக்குள் நீந்தி சவால்களை எதிர்கொள்ள வேண்டும். உங்களுக்குள்ளும் ஒரு அப்துல் கலாம் இருக்கிறார். நாளைக்கே நீங்களும் குடியரசு தலைவராகவும், ஆளுநராகவும் வரலாம். சமூகநீதி வரலாற்றில் பெண்கள் பயணித்த தூரம் சாதாரண தூரம் இல்லை. பெண் சமூகம் பல்வேறு கொடுமைகளை கடந்து வந்துள்ளது. மற்ற பெண்களுக்கு இருக்கும் கொடுமைகள் நெருக்கடியை விட இஸ்லாமிய பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடி மூன்று மடங்கு அதிகம். பெண்ணாக இருந்து போராடுவதே மிகப்பெரிய சவால். அதுவும் இஸ்லாமிய பெண்ணாக இருந்து போராடுவது அதைவிட பெரிய சவால். பெண்கள் கல்வி இல்லாத சமூகம் ஒருநாளும் முன்னேறாது. பலம் என்பது எண்ணிக்கையில் இல்லை. மிக மிக சிறிய சமூகத்தினராக இருப்பவர்கள் கல்வியில் முன்னேறி அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர்.

எனவே பலம் என்பது எண்ணிக்கையில் இல்லை. சமூகத்தில் எத்தனை பேர் திறமையாக இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். அடுத்த மதங்களை மதிக்க தெரிய வேண்டும். பிற மதங்களை மதிப்பது குறித்து நபிகள் தந்த மார்க்கத்தில் இருந்து தான் படிக்க வேண்டும். துணிவு மாற்றங்களை எதிர்கொண்டு அதை தயார் செய்ய வேண்டும். மனித நேயமில்லாத கல்வி மிகப்பெரிய பாவம். மொழியால், சாதியால், உணவால் மாறுபட்டாலும் உள்ளத்தால் நாம் அனைவரும் இணைய வேண்டும். தமிழர்களாய் வாழ்ந்து தமிழர்களாய் தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துவோம் என்று பேசினார். கல்லூரி தாளாளர் குதா முகமது உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...