தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை
தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சக்திவேல் இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது அவர் கூறியதாவது:-
கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மாத ஊதியம் ரூபாய் 20 ஆயிரம் வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பல ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சொந்த விருப்பு, வெறுப்பு காரணமாக தூய்மை காவலர்கள் பலர் பணியில் இருந்து நீக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பணி தளவாடங்கள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது போல் இவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வாரிசு பணியும், இழப்பீடு தொகை ரூபாய் 25 லட்சம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu