நெல்லை போலீஸ் எஸ்.பி.யுடன் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் சந்திப்பு

நெல்லை போலீஸ் எஸ்.பி.யுடன் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர்  சந்திப்பு
X

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யை கூட்ஸ்.டிரான்ஸ்போர்ட் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யுடன் கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் விபத்துகள் நடைபெறும் முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு விபத்துகளை தவிர்க்கும் விதமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் சமுகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றனர்

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக எடுக்கப்பட்டு வரும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறுதி அளித்தனர்.

இதில் தலைவர் நம்பிராஜன், துணை தலைவர் ராசிக் முஹமது, செயலாளர் மாரி சந்திரசேகர், துணைசெயலாளர் மாயாண்டி, பால்துரை, பொருளாளர் உய்காட் டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!