/* */

12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
X

திருநெல்வேலியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற 12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான நகை பிடிபட்டது.

திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரம் சோதனைச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சிறப்பு வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் தீவிர வாகன சோதனையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 12 கோடியே 89 லட்ச ரூபாய் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகையின் மதிப்பு அதிகம் என்பதால் பறக்கும் படை அதிகாரிகள் வருமானவரித்துறை மற்றும் போலீசிற்கு தகவல் அளித்தனர் .மேலும் விசாரணையில் அந்த வாகனம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் உள்ள நகைகடைகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் நகை கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் , நகையின் எடை அளவு ஆகியவற்றை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆவணங்களில் திருப்தி இல்லாததால் வாகனம் நகையுடன் பறிமுதல் செய்யப்பட்டு பாளையங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகைகள் அனைத்தையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Updated On: 30 March 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்