/* */

தியாகிகள் வாழ்ந்த இடங்களில் மதுக்கடைகளை மூட காந்திய சிந்தனையாளர்கள் கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் வாழ்ந்து மறைந்த ஊர்களில் முதற்கட்டமாக மதுக்கடைகளை மூட கோரிக்கை.

HIGHLIGHTS

தியாகிகள் வாழ்ந்த இடங்களில் மதுக்கடைகளை மூட காந்திய சிந்தனையாளர்கள் கோரிக்கை
X

காந்திய சிந்தனையாளர்கள் நெல்லையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது. 

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக தியாகிகள் வாழ்ந்த இடங்களில் மட்டுமாவது மதுக்கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும் என்று காந்திய சிந்தனையாளர்கள் நெல்லையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுகவும் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் முதல்கட்டமாக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் வாழ்ந்த இடங்களில் மட்டுமாவது மதுக்கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும் என்று காந்திய சிந்தனையாளர்கள் நெல்லையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திய சிந்தனையாளர் திருமாறன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பூரண மதுவிலக்கின் முதல் படியாக புதிய மதுவிலக்குக் கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் வாழ்ந்த மறைந்த பகுதிகளில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும். மதுவிலக்கு கொள்கைக்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். இதன் மூலம் மக்களுக்கு ஒருவித நம்பிக்கை ஏற்படும்.

தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களுக்கும், பொது மக்களுக்கும் எந்த லாபமும் கிடையாது. அதேசமயம் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மதுக்கடைகளை மூடுவது தான் பூரண மதுவிலக்கில் முதல் துவக்கமாக இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் கால்வாய் சரி இல்லை, குடிநீர் சரியில்லை என்று தான் கூறுகின்றனர். ஆனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எந்த சட்டமன்ற உறுப்பினரும் பேசுவதில்லை. பனை மரங்களை பாதுகாக்கவும், தடுப்பணைகள் கட்டுவதற்கும் அரசு காட்டும் ஆர்வத்தை விட பல மடங்கு ஆர்வத்தை மதுக்கடைகளை மூடுவதில் காட்ட வேண்டும். அதற்கு காந்திய சிந்தனையாளர்கள் அரசுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!