முழு ஊரடங்கு: நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை வேய்ந்தான் குளத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஒருசில கட்டிட பணிகள் முடிக்கப்படாத சூழலில் அவசர அவசரமாக புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியதால் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. இதனால் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தற்போது மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் புதிய பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பேருந்துக்கள் நிறுத்துமிடம் பயணிகள் அமரும் இடம் மற்றும் சுற்றுப்புற வளாகத்தில் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu