சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்: தமிழக அமைச்சர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்: தமிழக அமைச்சர்கள்  மரியாதை
X

சுதந்திரபோராட்ட வீரர் ஒண்டிவீரன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர்கள் கேகேஎஸ்ஆர்.ராமச்சந்திரன், மதி வேந்தன் உள்ளிட்டோர்

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலிருந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் அதிகமானோர் உருவாகியுள்ளதாக அமைச்சர் பெருமிதம்

வரலாறு மறைக்கப்படாமல் இருக்க சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழா எடுத்த பெருமாக்குரியவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிதான் என்றார் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் 250 -ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரணின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள முழு உருவசிலைக்கு வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், எம்பி ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசு அதிகாரிகளும் பங்கேற்று மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மேலும் கூறியதாவது: ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தான் சுதந்திரப்போராட்ட வீரர்கள் அதிகமானோர் உருவாகியுள்ளனர். வீரம் சார்ந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்படாமல் இருக்க பூலித்தேவன், வஉசி , பாரதி ,ஒண்டிவீரன் போன்றோருக்கு மணி மண்டபம் அமைத்ததுடன், நாட்டு மக்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் அரசு விழா எடுத்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மட்டும்தான் என்றார் அவர்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!