நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
X

நெல்லை மாநகர பகுதிகளில் ஷவர்மா கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரி சசி தீபா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

நெல்லையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லை மாநகர பகுதிகளில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரி சசி தீபா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள கடைகளில் தேதி குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த பொருட்களை குறித்து கேட்டறிந்த மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, ஷவர்மா வைக்கப்பட்டிருந்த கடைகளில் உள்ள இறைச்சியையும், அவைகளுக்கான மூலப்பொருட்களின் வாங்கிய தேதி உள்ளிட்டவைகள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என எச்சரித்தார்.

தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி கருகி இருந்ததைக் கண்டு அவர் அதை அப்புறப்படுத்தம் வகையில் அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் கொட்டினார். அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்த சோதனை தற்போது நடைபெறுவதாகவும், நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை 30 முதல் 40 கடைகள் அனுமதி பெற்றுள்ள தெருவோர வியாபாரிகள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!