சால்னாவில் புழு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அதிரடி சோதனை

சால்னாவில் புழு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அதிரடி சோதனை
X

உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் உணவருந்துவது வழக்கம்.

இன்று வழக்கம் போல் நோயாளியின் உறவினர்கள் சிலர் ஹோட்டலில் உணவருந்தும் போது சால்னாவில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரலிங்கம் விரைந்து சென்று கடையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைத்திருந்த சால்னா மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த குடிதண்ணீர் ஆகியவை உடனடியாக கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் கடையினை ஆய்வு செய்து பல்வேறு குறைகளை சரி செய்ய ஏதுவாக நாளை ஒரு நாள் முழுவதும் கடையை மூடவும் குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வு செய்தபின் கடையை திறக்கவும் அறிவுறுத்தினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரை காக்கும் அரசு மருத்துவனையின் எதிரேயே இதுபோன்று பொதுமக்களின் உயிரை பறிக்கும் வகையில் ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படும் சம்பவத்தால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களிடையே அச்சம் நிலவுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!