திரிபுராந்தீசுவரர் கோவில் சித்திரை பிரம்மோற்ச்சவ விழா கொடியேற்றம்
திரிபுராந்தீசுவரர் கோவில் பிரம்மோற்ச்சவ விழா கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது, திரிபுராந்தீசுவரர் கோவில். தாமிரபரணி நதி தீரத்தில் வரலாற்று பெருமையும், பழமையும் கொண்ட கோவிலாகும். இத் திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்ச்சவ விக்ரஹம் டச்சுக்காரா்களால் கடலுக்குள் வீசப்பட்ட பிறகு புதிய சிலை செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு கொண்டு செல்லும் வழியில், மூல விக்ரஹம் முருகன் அருளால் கிடைக்கப்பெற்றதும், அந்த புதிய சிலை இத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் சிறப்பு பெற்ற சித்திரை பிரம்மோற்ச்சவ பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடா்ந்து கொடிப்பட்டம் ஊா்வலமாக ரதவீதிகளில் கொண்டு செல்லப்பட்டு மிருகசீரீட நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபவேளையில் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னா் கொடிமரத்திற்க்கு அபிஷேகங்கள் செய்ப்பட்ட்டு வஸ்திரம், மலா்மாலைகள் சாற்றப்பட்டன. நிறைவாக கோபுர ஆரத்தியும், கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. உற்ச்சவ காலங்களில் தினசாி காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். 6ம் திருநாள் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் திருமுறைபாடியவாறு வீதி உலா நடைபெறும்.. 7ம் திருநாள் நடராஜா் ஏழுந்தருளி சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, மற்றம் பச்சை சாத்தி அலங்காரம் நடைபெறும்.
சிறப்பான கங்காளநாதா் புறப்பாடு நடைபெற்று 9-ம் திருநாள் தோ்திருவிழாவும், 10ம் நாள் தீா்த்தவாாியும், 11ம் நாள் 100 ஆண்டுகள் கழித்து தெப்ப உற்ச்சவம் நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu