குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.
X

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி என்சிசி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சிகள்

டெல்லியில் நடபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க. நெல்லையில் 50 என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி என்சிசி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சிகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து துப்பாக்கி சுடுதல், ஆயுதங்களை கையாளுதல், அணிவகுப்பு நடைபயிற்சி, தனி ஒழுக்கப் பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியினை என்சிசி கமாண்டர் லெப்டிணட் கர்னல் பாபி ஜோசப் வழங்கினார்.

இந்த நிலையில் பயிற்சியின் இறுதியாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க மாணவர்களை தேர்வு செய்யும் முதல் கட்ட அணிவகுப்பு நடை தேர்வு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவர்கள் 250 பேர் பங்கேற்றனர். மிடுக்கான நடை, உயரம், சல்யூட் அடிக்கும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்று நடைபெற்ற தேர்வில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வு பிற மாவட்டங்களில் நடைபெறும்

இறுதியாக தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று நடைபெறும் பல்வேறு கட்ட தேர்வில் மொத்தம் 120 என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26 டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!