தந்தை பெரியார் நினைவு தினம்: திராவிட கழகம் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் நினைவு தினம்: திராவிட கழகம்  மாலை அணிவித்து மரியாதை
X

தந்தை பெரியாரின் 48 வது நினைவு தினம். நெல்லை மாவட்ட திராவிட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லையில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி திராவிட கழகம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை பாளை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிட கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட வீர வணக்கம் செலுத்தினார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்