டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி
X

நெல்லை மாநகர் காவல்துறை கிழக்கு மண்டல துணை ஆணையர் சீனிவாசன் தொடங்கி வைத்து கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வண்ணார்பேட்டையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான வார விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது

தேசிய கண்தான வார விழாவை முன்னிட்டு நெல்லையில் தனியார் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து மாபெரும் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8- ந் தேதி வரை தேசிய அளவில் கண் மருத்துவமனைகளும், அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கண்தான வார விழா இரண்டு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. கண்தான வார விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் செயல்பட்டு வரும் அகர்வால் தனியார் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து பொதுமக்களுக்கு கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மனிதசங்கலி வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.

இதில் நெல்லை மாநகர் காவல்துறை கிழக்கு மண்டல துணை ஆணையர் சீனிவாசன் தொடங்கி வைத்து கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.போதையில்லா நெல்லையை உருவாக்குவோம், போதை பொருள் புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால் மாணவிகள் 100 க்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் பள்ளி, கல்லூரி , நர்சிங் கல்லூரி மாணவிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானம் குறித்து விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி நின்றனர்.

இதில் மருத்துவர்கள் லயனல்ராஜ், ரூபஸ்பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக காவல்துணை ஆணையர் தலைமையில் மருத்துவர்கள், மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிகளை அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் கோமதிநாயகம், ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், மருத்துவர் ராணி லட்சுமி, உதவி பொது மேலாளர் பிரபு, உதவி மேலாளர் அகிலன், பேச்சிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future