100% வாக்களிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.

100% வாக்களிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.
X
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் 100% வாக்களிப்பிற்கான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

பாளை மார்க்கெட் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதி மொழியோடு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாளையங்கோட்டை வட்டாட்சியர் க. செல்வன் ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் துணை வட்டாட்சியர் பழனி ,நல்நூலகர் முனைவர். முத்துகிருஷ்ணன் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், ரெட்கிராஸ் சபேசன், சமூக ஆர்வலர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்கள். கடைகள், போன்றவற்றில் ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்