நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச்சூழல் தின பெண்களுக்கான இணையவழி சிறப்பு நிகழ்ச்சிகள்.

நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச்சூழல் தின பெண்களுக்கான இணையவழி சிறப்பு நிகழ்ச்சிகள்.
X
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச்சூழல் தின பெண்களுக்கான கோலப் போட்டிகள் விழிப்புணர்வு இணையவழி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச் சூழல் தின பெண்களுக்கான கோலப்போட்டி மற்றும் இணைய வழி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அரசு அருங்காட்சியகம், தமிழ் நாடு அரசு வனத்துறை சூழல் மேம்பாட்டுத் திட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்,அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு மற்றும் நல்லதை பகிர்வது நம் கடமை கலை பண்பாட்டு மன்றம், இணைந்து உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான அரிசி மாவு கோலப்போட்டி மற்றும் இணைய வழி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.

ஆண்டுதோறும் ஜுன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் பாரம்பரிய மரபினை மீட்டெடுக்கும் விதமாகவும், எறும்பு மற்றும் பறவைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், வீட்டு முற்றத்தில் அரிசி மாவினை பயன்படுத்தி கோலமிட்டு அந்த புகைப்படத்தை வாட்சப்பில் அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டது. உலகம் முழுவதிலும் சூழலியல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு முக்கிய அங்கம் வகித்து வருகிறது, எனவே பெண்கள் தங்களை சூழலியல் பாதுகாப்பில் இணைத்துக் கொள்ளும் விதமாக பெண்களுக்கான பிரத்தியோகமான நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகமெங்கிலும் இருந்து சுமார் 230 நபர்கள் இணையவழியில் இந்த போட்டியில் பங்கேற்றார்கள். இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருங்காட்சியக காப்பாளர் சத்தியவள்ளி செய்திருந்தார்.

#இன்ஸ்டாநியூஸ் தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #நெல்லை #அரசுஅருங்காட்சியகத்தில் #உலகசுற்றுச்சூழல்தின #பெண்கள் #சிறப்பு #நிகழ்ச்சிகள் #நடைபெற்றது #women #womens

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil