நெல்லை-மதிமுக சார்பில் துரை வைகோ கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்

நெல்லை-மதிமுக சார்பில் துரை வைகோ கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்
X

மதிமுக சார்பில் துரை வைகோ கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

நெல்லையில் மாவட்ட மதிமுக சார்பில் துரை வைகோ ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், 100 ரூபாய் ரொக்க பணம் ஆகியவை அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மதிமுக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். உயிருக்குப் போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

நெல்லை மாவட்ட மதிமுக சார்பில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கியுள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று கொரோனா தடுப்புப் பணியில் காவலர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே அவர்களை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அனைவரும் அரசியல் ஜாதி, மத வேற்றுமையை கடந்து ஒருவருக்கு ஒருவர் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும். என்பதே தலைவர் வைகோவின் வேண்டுகோள் ஆகும் என தெரிவித்தார்.

.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!