பாளையங்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்வேன் ; வேட்பாளர் முகம்மது முபாரக்

பாளையங்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்வேன் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் உறுதியளித்தார்.

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முகம்மது முபாரக் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பொதுமக்களை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சந்தித்து வருகிறார். இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30,31 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளான குருத்துடையாரபுரம், குறிச்சி, வசந்தாபுரம், புதுதெரு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அந்த பகுதிகளில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்ததோடு வீதி வீதியாக குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக முறையிட்டனர் அப்போது பேசிய அவர் பாளையங்கோட்டை தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இதே நிலை நீடிப்பதாக கூறினார். தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க முயற்சி செய்வேன் என வாக்குறுதி அளித்தார். மேலும் கழிவு நீரோடை,முறையான சாலை வசதி அமைத்து தருவேன் என வாக்குறுதி அளித்தார்.

இந்த பிரச்சார நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் வார்டு நிர்வாகிகள் புதுமனை சிந்தா, வதூத்கான், ஞானியார்.ஹயாத்து தீன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹைதர் எம்சி பாபு பகுதி செயலாளர்கள் சீனிவாசன், பாண்டி, சரவணன், குத்தாலம் ,நேசம் ரப்பானி கபடி காஜா, வீரமணி,செல்லம்மாள் உள்ளிட்டோர் மற்றும்தேமுதிக நிர்வாகிகள் எம்ஐ அம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!