கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
X
கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நெல்லை அருகே கணவன்- மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூ 3,000 அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

நெல்லை அருகே கணவன்- மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி பேச்சுதாய். இவர்களை கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பிரச்சினை தொடர்பாக ஆறுமுக ராஜ், செல்லையா மற்றும் பேச்சுத்தாய் ஆகிய இருவரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனைத் தட்டிக் கேட்க சென்ற செல்லையா மற்றும் அவரது மனைவி பேச்சுதாயை ஆறுமுக ராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகராஜ் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் குற்றவாளிக்கு ரூ 3,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!