நெல்லையில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
X

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான அப்துல்வகாப் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, நெல்லையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல்- சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று தமிழக அளவில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது விலைவாசி உயர்வு, மக்களுக்கெதிரான வேளாண் திருத்தச்சட்டம் , பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, ஒன்றிய பொறுப்பாளர் செல்வகருணாநிதி, மற்றும் கணேஷ்குமார் ஆதித்தன், ஜார்ஜ்கோசல் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான அப்துல்வகாப் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், மேலப்பாளையம் பகுதி திமுக சார்பில், பகுதி செயலாளர் துபாய்சாகுல் தலைமையில் மேலப்பாளையம் சந்தையில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!