நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதன் தொடக்க விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்துகொண்டு கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் தனிநபர் போட்டிகளாக கைகால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், மற்றும் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து குழு போட்டிகளாக பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கைபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் வெற்றிபெறும் நபர்கள் மற்றும் அணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu