/* */

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்
X

20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் இல்லாமல் தவித்த விவசாயிகளுக்கு விடிவுகாலம் இலக்கை தாண்டி அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர். சாமானியர்கள், விவசாயிகள் குறைகள் தீர்க்கும் முதல்வராக தமிழக முதல்வர் செயல்படுகிறார் சபாநாயகர் அப்பாவு புகழாரம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மின் இணைப்பு வழப்பப்படும் என்ற அறிவிப்பு படி, தமிழகம் முழுவதும் கடந்த 8 மாத காலத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் நெல்லை மண்டலத்தில் இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 423 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1154 மின் இணைப்புகளும், தென்காசி மாவட்டத்தில் 2769 மின் இணைப்புகளும் அடங்கும், குமரி மாவட்டத்தில் 301 விவசாயம் இணைப்புகளும், விருதுநகர் மாவட்டத்தில் 874 மின் இணைப்புகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 757 விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல மின் பகிர்மானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் காண்பதற்கான ஏற்பாட்டை நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் நெல்லை மண்டல மின் பகிர்மான கழகம் சார்பில் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலவச மின்சாரத்திற்காக காத்திருந்த தற்போது 2013ம் ஆண்டு வரை விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவு பேசுகையில் -சாமானியர்கள், விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. 5 பவுன் நகைக்குட்பட்ட கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள், சாமானியர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்த முன் வர வேண்டும். அவர்களை அலைகழிக்கும் போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும் என பேசினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2022 2:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...