ஜூடோ அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி
பாளையங்கோட்டையில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு ஜூடோ பயிற்சி அளிக்கப்பட்டது.
பாரத் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட ஜூடோ அமைப்பின் சார்பில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சார்பாக, டிசம்பர் 5 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக 2 நாட்கள் பயிற்சி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நெல்லை மாவட்ட ஜூடோ கழகத்தின் உதவியோடு ஜூடோ பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை விளையாட்டு அலுவலர் ராஜேஷ் துவக்கி வைத்தார். சிறப்பு ஒலிம்பிக்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கலிலுல்லா வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் ஜூடோ மாவட்ட செயலாளர் ஜெகமோகன், சிறப்பு பயிற்சியாளர் மணிகண்டன், ரீச் இந்தியா டைரக்டர் கண்ணகி ஹசீனா, தாமிரபரணி பிரிட்டோ, அலெக்சாண்டர், ஷாஜகான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பள்ளிகளை சார்ந்த குழந்தைகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இந்த ஜூடோ பயிற்சியில் கலந்து கொண்டனர். வருகின்ற 5-ஆம் தேதி மாநில அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் செலக்சன் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் ஜூடோ விளையாட்டுப் போட்டிக்கு செல்லவுள்ளனர். மேலும் இந்த சிறப்பு பள்ளிகளை சார்ந்த மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மனதளவில் உற்சாகப் படுத்துவதற்காக எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும், இந்த ஜூடோ பயிற்சியில் அவர்கள் மிகுந்த மன மகிழ்ச்சி அடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu