நெல்லை: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் நினைவு தினம் அனுசரிப்பு

நெல்லை: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் நினைவு தினம் அனுசரிப்பு
X
தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் 37 வது நினைவு தினம். அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் 37வது நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது

நெல்லை, வண்ணார்பேட்டை தினமலர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு, அஇஅதிமுக நெல்லை மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை- கணேசராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தி KJC.ஜெரால்ட், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டி, பகுதி கழக செயலாளர் சின்னத்துரை, மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!