/* */

பங்குனி உத்தித்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குடும்பத்துடன் பக்தர்கள் வழிபாடு

மேலப்பாளையத்தில் உள்ள சாஸ்தா கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

பங்குனி உத்தித்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குடும்பத்துடன் பக்தர்கள் வழிபாடு
X

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை ஒட்டி குலதெய்வம் கோயிலான சாஸ்தா கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று வழிபாடு நடத்துவார்கள். அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இரவு 12 மணிக்கு பிறகு சாஸ்தாவின் காவல் தெய்வங்களான கருப்பசாமி, சுடலை மாடசாமி, தளவாய் மாடசாமி, சங்கிலி மாடசாமி, கரையடி மாடசாமி, முண்டசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, வன்னியர், வன்னிய தலைவி, பேச்சியம்மாள், பிரம்மசக்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கு படைகளும், பூஜையும் ஆடு கோழி பலியிடுவது நடக்கும்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு சாஸ்தா கோவில்கள் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் ஆயிரங்கால் சாஸ்தா திருக்கோவில் காலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

அப்போது பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தனர். இந்த கோவிலில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.இதேபோல் பிராஞ்சேரி, கரையடி மாடசாமி திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பங்குனி திருவிழாவையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 March 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...