நெல்லை சாலையில் ஆயுதங்களுடன் நடனம்; போலீசாரிடம் சிக்கிய கார் டிரைவர்

நெல்லை சாலையில் ஆயுதங்களுடன் நடனம்;   போலீசாரிடம் சிக்கிய கார் டிரைவர்
X

பைல் படம்.

நிகழ்ச்சி ஒன்றில் வாளுடன் நடனமாடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை திருமால்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார் டிரைவராக பணி செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் மணிகண்டன் கையில் மூன்று அடி நீளமுள்ள வாளுடன் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இதனையடுத்து, மாநகர காவல்துறையும் சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் இந்த காட்சியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், கொலை மிரட்டல் , பொது மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் மணிகண்டன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து மூன்று அடி நீளமுள்ள வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!