இணையவழி குற்றங்கள்: பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மேலப்பாளையத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் படி, மேற்கு காவல் துணை ஆணையாளர் பொறுப்பு K.சுரேஷ்குமார் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நெல்லை மேலப்பாளையம் Golden jubilee மேல் நிலை பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சமூக வலைதளங்களை பாதுகாப்பக கையாள்வது குறித்தும், ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி பற்றியும், அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 க்கு புகார் தெரிவித்தால் இழந்த பணம் முழுவதும் மீட்கமுடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் பற்றியும், நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு, தலைமையிலான சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், வித்யாலட்சுமி, தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் விழிப்புணர்வு வாசகங்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu