என்ஜினீயர் தவற விட்ட பையை மீட்டுக்கொடுத்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
நெல்லை மாநகர பகுதியில் இன்று மாலை திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வண்ணாரப்பேட்டை பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே ஒதுங்கினர். அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கே.டி.சி. நகரைச் சேர்ந்த பாபநாசம் (வயது 68) தான் கொண்டு வந்த பேக்கை வண்டியில் மாட்டி விட்டு மழைக்காக ஓரமாக நின்று உள்ளார்.
தொடர்ந்து மழை நின்றதும் தனது இருசக்கர வாகனத்தில் கே.டி.சி. நகர் சென்ற பின்பு தனது பேக்கை பார்த்த போது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு வந்து பேக்கை அங்கும், இங்குமாக தேடி அலைந்துள்ளார். அதனை கவனித்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் மீரா முதியவரை அழைத்து விசாரித்தபோது அவர் நடந்ததை கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஏற்கனவே மேம்பாலம் அருகில் கீழே கிடந்த பேக் ஒன்றை ஆய்வாளர் மீரா எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அந்த பேக்கை காட்டியபோது அது முதியவர் பாபநாசத்திற்கு சொந்தமான பேக் என தெரியவந்ததால் அவரிடம் ஒப்படைத்தார். பேக்கை பெற்றுக்கொண்ட முதியவர் காவல் ஆய்வாளருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்து சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu