/* */

நெல்லை - நாளை முதல் ஊரடங்கு-திருமண தேதிகள் மாற்றப்பட்டு இன்று நடைபெற்றது

தளர்வுகள் இல்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நெல்லையில் இந்தவாரம் நடைபெற இருந்த திருமணங்கள் அனைத்தும் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை - நாளை முதல் ஊரடங்கு-திருமண தேதிகள் மாற்றப்பட்டு இன்று நடைபெற்றது
X

திருமணம் மாதிரி படம்.

தளர்வுகள் இல்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நெல்லையில் இந்த வாரம் நடைபெற இருந்த திருமணங்கள் அனைத்தும் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் 50 நபர்களுக்கு மிகாமல் வைத்து நடத்தலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை அழைத்து பொதுமக்கள் திருமணங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு தளர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமண தேதியை மாற்றி வரும் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கல்யாண முகூர்த்த நாள் உள்ளது. அந்த தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது ஆனால் அந்த சமயத்தில் முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பலர் திருமண தேதியை மாற்றி இன்று திருமணத்தை நடத்த அவசர ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தினர்.

மளிகைக்கடை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதால் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும் காவலர்களின் கெடுபிடி அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிக்கல் எதுவும் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்து ஏற்பாடுகள் தட புடலாக நடந்தன.

நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் குறித்த தேதியை மாற்றி இன்று அவசர அவசரமாக திருமணத்தை நடத்த முன்வந்துள்ளனர் பொதுவாக திருமணம் என்றாலே உறவினர்கள் நண்பர்கள் ஊரார் என அனைவரையும் அழைத்து பெரியவர்கள் முன்னிலையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடிக்க பாராம்பரிய பழக்க வழக்கங்களுடன் குடும்பம் சகிதம் மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவார் ஆனால் கொரனாவால் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் பலரது திருமணங்கள் பாரம்பரியத்தை இழந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக சில உறவினர்களை மட்டும் அழைத்து கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது.

இது போதாது என்று தற்போது திருமணத்தின் முக்கிய அம்சமான முகூர்த்த நாளையே மாற்றும் அளவிற்கு கொரனாவின் அச்சுறுத்தல் மக்களை படாதபாடு படுத்துகிறது என்றே கூறலாம்.

Updated On: 23 May 2021 10:04 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...