/* */

பாளையங்கோட்டை பஸ் நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பரபரப்பு

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பாளையங்கோட்டை பஸ் நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பரபரப்பு
X

பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரித்த போலீசார்.

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில், மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் வெடிகுண்டு வெடித்ததில் யாருக்கும் காயமும் இல்லை, பேருந்து நிலையத்திலும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் யார் ? எங்கு தயாரித்தார் ? இதனை வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 18 April 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...