பாளையங்கோட்டையில் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு

பாளையங்கோட்டையில் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு
X

பாளையங்கோட்டை மண்டல தலைவர் அலுவலகத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கினை ஏற்றினர்.

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை எம்எல்ஏ அப்துல் வகாப், மேயர் சரவணன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல தலைவர் அலுவலகத்தை இன்று (23.04.2022) பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை மண்டல தலைவராக மாமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்விழாவில் பாளை மண்டல உதவி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனுராதா, பேச்சியம்மாள், சின்னத்தாய், பாலம்மாள், சீதா ஜெகநாதன், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!