நெல்லை சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் காெராேனா தடுப்பூசி முகாம்

நெல்லை சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் காெராேனா தடுப்பூசி முகாம்
X

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம். 200க்கும் மாணவர்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரி நிர்வாகம் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பள்ளி, கல்லூரியில் சுழற்சி முறையில் மாணவ-மாணவிகள் வரவழைத்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு இன்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர். மு.முகம்மது சாதிக் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் செய்யது முஹம்மது காஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சமாதானபுரம் (Urban Public Health Centre) சார்பாக மருத்துவர் சுகன்யா தேவி மற்றும் மருத்துவர் ரேஷ்மா தலைமையிலான குழுவினர் இம்முகாமில் கலந்து அனைவருக்கும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தினர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஜெஸ்லின் கனக இன்பா, முனைவர் ஜெமி மெர்லின் ராணி, பேராசிரியர். சாகுல்ஹமீது, முனைவர். அப்துல் ரஹ்மான், முனைவர் மாரியம்மாள், பேராசிரியர் முகைதீன் பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி இம்முகாமில் பயனடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!