நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4 மாணவிகளுக்கு கொரோனா

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4 மாணவிகளுக்கு கொரோனா
X

சித்த மருத்துவக் கல்லூரியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கு மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் 13-ந் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதனால், மருத்துவத் துறை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் 16-ந் தேதி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. அடுத்த சில நாட்களில் மருத்துவத் துறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் நேரடி வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 3 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட நான்கு பேரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இன்றும் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் விடுதியில் தங்கி உள்ள மாணவிகள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நேரடி வகுப்புகள் தேவைப்பட்டால் சமூக இடைவெளியோடு நடத்தலாம் என்றும் பல்கலைக் கழக தேர்வுகள் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியோடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செய்முறை தேர்வுகள் சமூக இடைவெளி யோடு நடத்தப்படும் என்றும் சித்தமருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் சித்த மருத்துவ கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!