நெல்லை-பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதி சாவு

நெல்லை-பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதி சாவு
X
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற கைதி மரணமடைந்தார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபோது மரணமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே புன்னை நகரைச் சேர்ந்த துரை(35). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனைக் கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைதி துரைக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துரை மரணம் அடைந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!