நெல்லையில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
நெல்லையில் கொலை சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருகே உள்ள படப்பகுறிச்சியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து மற்றும் அவரது சகோதரர் சேர்மன் இருவரும் திம்மராஜபுரம் பகுதியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் இசக்கிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
அதனை தடுக்க முயன்ற சேர்மன் படுகாயமடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சேர்மனை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை மாநகர போலீஸ் துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் உயிரிழந்த இசக்கிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து மோப்பநாய் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர்., எதற்காக கொலை நடைபெற்றது. யார் செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu