திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்., உறுப்பினர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்., உறுப்பினர்களுக்கு பாராட்டு
X

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மாவட்ட மாநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நடைபெற்ற நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனுராதா சங்கரபாண்டியன், லெட்சுமி உமாபதி சிவன், அம்பிகா முத்துதுரை ஆகிய 3 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாமன்ற உறப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினர்.

முன்னதாக மாமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ளைபாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், கவி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!