நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் ்அரசி மூட்டைகள்.

நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

நெல்லை மாநகரம் பாளைங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம், தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பாளையங்கோட்டை குறுந்துடையார்புரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா சுமோ வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் முறப்பநாட்டை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஒரு டன் ரேஷன் அரிசியை காரில் கடத்தியது தெரியவந்தது.

போலீசார் சுபாஷ் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாராரிடம் ஒப்படைத்ததினர். இதனைத் தொடர்ந்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலுக்குக்கு பயன்படுத்திய டாடா சுமோ மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சுபாஷை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பள்ளிப்பாளையத்தில்  தடுப்பணையில் நீர் இருப்பால் குடிநீருக்கு பற்றாக்குறை வராது..!