அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று ஆய்வாளர்களுடன் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் உடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
Tirunelveli Latest News -நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் சந்திப்பு.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் உடன் ஓரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் புனித மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவிகள் 80 நபர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் திவான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் எழுத்தாளர் திவான் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பற்றி பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பான தங்களின் சந்தேகங்களை வரலாற்று ஆய்வாளர் திவான் இடம் கேட்டு விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில் புனித மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரோஜாப்பூ மற்றும் வினோபா கிளாடியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu