நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் விஷ்ணு
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். தொடர்ந்து 20 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 75- வது சுதந்திரதின விழா நாடுமுழுவதும் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் 75- வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து 20 பயனாளிக்கு 6 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அரசுதுறையில் சிறப்பாக பணியாற்றியவர்கள், வீரதீர செயல்கள் புரிந்தவர்கள் என 253 பேருக்கு நற்சான்று வழங்கி பாராட்டினார். சுதந்திரப்பேராட்ட வீரர் வ.உ.சி யின் தியாகத்தை போற்றும் வகையில் செக்கு, சுதேசி கப்பல் ஆகியவற்றை தத்துரூபமாக வடிவமைத்து மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பல்வேறு கண்கவர் கலைநிகழ்சிகளும் நடைபெற்றது.
விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் அவிநாஷ்குமார், நெல்லை சரக டிஐஜி பரவேஸ்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu