நெல்லையில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை கலெக்டர் நேரில் ஆய்வு

நெல்லையில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை கலெக்டர் நேரில் ஆய்வு
X

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வாகனங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

நெல்லை மாவட்டத்தில் 88 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வாகனங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் 88 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத பெற்றோர்களுக்கு மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்

தமிழகத்தில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை பரவியதைத் தொடர்ந்து நோய் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. பின்னர் முதல் அலையின் தாக்கம் குறைந்த பின்பு ஊரடங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டு 10, 12 –ம் வகுப்புகள் , மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இரண்டாம் அலை வீரியம் அடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. 1 முதல் 12 –ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடந்து வந்தது. தற்போது இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து 9, 10, 11 மற்றும் 12- ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளதா, ஜி.பி.எஸ், பேருந்தின் படிக்கட்டு, பேருந்தின் பிளாட்பாம் , வெப்பமாணி உள்ளிட்ட 13 இனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்யில்:-

நெல்லை மாவட்டத்திழல் 17 கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்ய 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 88 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பின்னர் தினமும் காலை ஒரு மணிநேரம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பெற்றோர்களுக்கு மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் தேவையான முககவசங்கள், சானிடைசர், உள்ளிட்ட நோய் தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!