நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமகவினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணாரப்பேட்டையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தவிர்க்கவும் முடியாமல், அதிக விலை கொடுத்து வாங்கவும் முடியாமல் மக்கள் தவிக்கும் போது, சிலர் மானியம் வங்கி கணக்கில் வரவில்லை என்றும், வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அதையும் பிடித்துக் கொள்ளும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சமாக 28சதவிகிதம் வரி வசூலிக்க முடியும். ஆனால் அரசு பெட்ரோல் டீசலுக்கு 50 சதவீதம் வரி வசூலித்து மக்களை மீளா துயரத்துக்கு தள்ளுகிறது. இன்றைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், நலனுக்காகவும் அரசு விதிக்கும் நியாயமற்ற முறையிலான வரிவிதிப்பை எதிர்த்து இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எட்வின், மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் எஸ் வி கணேசன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu