நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை முதல்வர் காணொலி மூலம் திறப்பு

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை முதல்வர் காணொலி மூலம் திறப்பு
X

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லையில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது, பின்னர் போதிய வசதி இன்மையால் வேறு வாடகைக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இதற்கு புதிய காவல் நிலையம் கேட்டு மாநக காவல் ஆணையர் அலுலகத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதற்காக ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாளையங்கோட்டை மகராஜநகர் ரவுண்டானா அருகே கட்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காவல் நிலையம் திறக்கப்பட்டதும் மாநகர காவல்துறை உதவி ஆணையர் ஜெய்சங்கர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், அப்பகுதி மாமன்ற கவுன்சிலர் சீதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். இதனைத்தொடர்ந்து மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் புதிய காவல் நிலையத்தை பார்வையிட்டு உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!