தாமிரபரணி ஆற்றில் 22 இடங்களில் தூய்மைப் பணி:அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
![தாமிரபரணி ஆற்றில் 22 இடங்களில் தூய்மைப் பணி:அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தாமிரபரணி ஆற்றில் 22 இடங்களில் தூய்மைப் பணி:அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்](https://www.nativenews.in/h-upload/2021/07/30/1207209-img-20210730-wa0019.webp)
நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் 22 இடங்களில் தூய்மைப்பணி தொடங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மணிமூர்த்தீஸ் புரம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அரசு அருங்காட்சியகத்தில்அங்கு அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஆம்பி தியேட்டரை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம்தென்னரசு மேலும் கூறியதாவது:நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் முழுதுமாக செலுத்தி வருகிறோம். நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்நிலைகள் பராமரிப்புப் பணிகள், மரம் நடும் பணிகள், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 237 நீர்நிலைகளை நெல்லை நீர் வளம் என்ற இணையதளம் மூலம் ஆவணப் படுத்தும் பணியும் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தன் குளத்தை அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.
தாமிரபரணி நதி தொடங்கும் வி.கே.புரம் முதல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றின் எல்லை வரை இருக்கும் கரைகள் சுத்த செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள், தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான கல் மண்டபங்கள் சீரமைப்புப்பணிகள், பாளையங்கோட்டையில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூ.1 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அரசு அருங்காட்சியகத்தில் ஒலி-ஒளி வாயிலாக வரலாற்றை மாணவ-மாணவிகள் கண்டு தெரிந்து கொள்ளும் வசதிகள் உள்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu