ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகி வரும் புதிய தேர்

ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகி வரும் புதிய தேர்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பழமைவாய்ந்த அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் திருத்தேர்

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 28ம் தேதி புதிய திருத்தேரின் வெள்ளோட்ட விழா

அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையான புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டது. திருத்தேரின் வெள்ளோட்ட விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பழமைவாய்ந்த அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக் கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள தேர் பழுதடைந்து கடந்த 6 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த தேரை சரி செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை உத்தரவின்படி, ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபாவின் மூலமாக புதிய மரத்தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகேபாலசுவாமி திருக்கோயிலுக்கு 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்டதாக புதிய மரத்தேர் அமைக்கப்பட்டு சக்கரம் 5 அடி உயரம் மற்றும் 5 அடுக்கு வேலைபாடுகளுடன் தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய மரத்தேர் திருப்பணி செய்வதற்கு ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபாவிற்கு அனுமதி தந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, மரத்தேர் திருப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது எம்பெருமான் திருஉள்ளபடி புதிய மரத்தேர் பணி முழுவதுமாக முடிவடைந்தது. இந்த தேர் வருகின்ற 28.02.2022 திங்கட்கிழமை அன்று வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெள்ளோட்ட திருவிழாவில், ஆன்மீக பெருமக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பிரபந்த கோஷ்டிகள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மரத்தேர் வெள்ளோட்டம் விழா நடைபெற உள்ளது. இந்த புதிய திருத்தேரினை கடந்த ஓர் ஆண்டுகளாக ஸ்தபதி கஜேந்திரன் தனது உதவியாளர்களுடன் உருவாக்கி உள்ளார்.

புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபாவின் சார்பாக தலைவர் கே. இராமகிருஷ்ணன், செயலாளர் ஆர். விநாயகராமன், பொருளாளர் எஸ்.கே.சத்தியமூர்த்தி, உபதலைவர் ஏ.ரெங்கநாதன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், ஏ.இராமசந்திரன், துணைத்தலைவர் இணைச்செயலாளர் ஏ.பி.ஜெயபெருமாள், துணைசெயலாளர் ஆர்.திருமலைகுமாரசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சோமு, ஜி.சிவராமன், ஆர்.ஸ்ரீனிவாசன், ஏ.வெள்ளக்கண்ணன், டாக்டர் எஸ்.முருகேசன், ஆர்.மீனாராமச்சந்திரன், ப.ஜெயலெட்சுமி, எஸ்.கே.குப்புசாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.மாரியப்பன், பி.ஆர்.பி. அங்கப்பன் மற்றும் கௌரவ ஆலோசகர்கள் வி.அனந்த நாராயணன் ஆச்சாரியார், ஆர்.ஸ்ரீனிவாச ஐயங்கார், தமிழ்தலைவன் சபா மற்றும் ஆயுள் கால உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய தேரினை வடம் பிடித்து இழுத்து இறையருள் பெறுக கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil