டீ குடித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

டீ குடித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்
X

பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு டீக்கடையில் டீ குடித்தபடி இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி,மேலப்பாளையம், குலவணிகர்புரம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு இன்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்து கூறினார். இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருப்பது அதிமுக அரசு தான். ஆகையால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறுவாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், பகுதி செயலாளர் கயாத் பகுதி பொருளாளர் ரசாக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project