எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராக பர்கிட் அலாவுதீன் தேர்வு
பர்கிட் அலாவுதீன்.
நெல்லை மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பார்களாக மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி மற்றும் மண்டல தலைவர் ஜுல்பிகர் அலி கலந்து கொண்டு புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிவித்தனர். பொதுச் செயலாளராக பர்கிட் அலாவுதீன், மாவட்ட செயலாளராக ஜவுளி காதர், மாவட்ட பொருளாளராக முகம்மது காசிம், மாவட்ட செயற்குழு உறுப்பினராக மின்னத்துல்லாஹ் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் சட்டப்பிரிவு 161 ன் படியும் அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் மேலப்பாளையத்தில் 26.3.22 அன்று மாலை நடைபெறும் ஒற்றை கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்களை திரளாக பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக புதிய மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பர்கிட் அலாவுதின் நன்றி உரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மானூர் சேக் அப்துல்லாஹ், மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.எ.கனி, மஹ்மூதா ரினோஷா ஆலிமா, வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, ஜவுளி காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu