நெல்லையில் பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பிரெய்லி முறை வாசிப்பு பயிற்சி
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 5 வது நாளாக பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், நடைபெற்றுவரும் 5 வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில் நடைபெற்றுவரும் 5 வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் வெகு சிறப்பாக நடை பெற்றது. சுதந்தி போராட்ட வீரர்கள், கலை இலக்கியம், இயற்பியல், சிறுநாவல் போன்ற புத்தகங்களை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இன்றைய நிகழ்ச்சியில் பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பிரெய்லி முறையில் வாசிப்பு பயிற்சியும் மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவியாகளுக்கு சைய்கை மொழியில் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றது.
மேலும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்கள் மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்டது. புத்தக திருவிழா நிகழ்ச்சியில் ச.ரே. ரமண கைலாஷ் எழுதிய சுமித்தரா தீவில் சுற்றுச் சூழல் பாதிப்புகள் மூலம் விளங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த Fire of Sumatra என்ற நாவல் குறித்து கலந்துரையாடினார்கள். சுற்றுச்சூழலின் மூலம் புவி வெப்பமயமாதல், அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம், புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை இடற்பாடுகள் குறித்தும், இயற்கை வளங்களான வனங்களைப் பாதுகாப்பது,நம்மை போன்ற இளைஞர்கள்,மாணவ,மாணவிர்கள், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்பதன் மூலமாக வெப்பமயமாதலை தடுப்பதில் நமது பங்களிப்பை செலுத்தலாம் என்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கலந்துரையாடலில் சிறப்பான கேள்விகளைக் கேட்டு பதிலைப்பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(ஒழுங்கு டாக்டர்.சுகன்யா, பேரிடர் மேலாண்மை வட்டாச்சியர் இரா.நாறும்பூநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu