புத்தகத் திருவிழா -75வது சுதந்திர தின அமுத பெருவிழா விழிப்புணர்வு மாரத்தான்
புத்தகத் திருவிழா மற்றும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் வகாப், மேயர் பி. எம் சரவணன், துணை மேயர் கே. ஆர் ராஜீ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கி அரசு பல்நோக்கு மருத்துவனை வழியாக ஸ்ரீனிவாச நகர் வரை வந்து அண்ணா விளையாட்டு அரங்கில் ஓட்டத்தை நிறைவு செய்தனர். போட்டியில் ஆண்கள் பிரிவை சேர்ந்த நோவா பயிற்சி அகாடமி மாணவர் அஜித் குமார், ஸ்ரீவைகுண்டம் கலைக்கல்லூரி மாணவர் பார்வதி நாதன், பாளையங் கோட்டை கல்லூரி மாணவர் பால இசக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
இதே போல் பெண்கள் பிரிவில் ஆலங்குளம் பள்ளி மாணவி ஆலின் லிண்டா, குமரி மாவட்டம் மாமுட்டு கடையை சேர்ந்த பள்ளி மாணவி ஜெசிலி, பாளையங் கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவி ஓவியா வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புத்தக திருவிழான்று பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu