நெல்லை தனியார் பொறியியல் கல்லூரியில் இரத்த தான விழிப்புணர்வு முகாம்
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் உலக ரத்த தான நாளையொட்டி இரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
A Blood Donation Camp Report - உலக இரத்த தான நாள் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி- இந்தியா மருத்துவ சங்கம் இணைந்து இரத்த தான முகாம்.
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் உலக ரத்த தான நாளையொட்டி கல்லூரியின் இளைஞர் செஞ்சுலுவைச்சங்கம், இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷனும் (IMA) இணைந்து இரத்த தான விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
உலக இரத்த தான நாள் ஜூன் 14ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் (IMA) இணைந்து கல்லூரியில் உலக இரத்த தான தான நாளை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் IMA தலைவர் டாக்டர். ரூபஸ் பொன்னையா, முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் டாக்டர். ராஜா விக்னேஷ், இணை செயலாளர் பிரபுராஜ், டாக்டர். முகமது இப்ராஹிம், லட்சுமி மாதவன் மருத்துவமனை டாக்டர். மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு இரத்த தானம் மிகவும் அவசியம் என்று நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை எம்.பி.ஏ.மாணவிகள் தீபலட்சுமி, தனிஷ்கா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இந்த முகாமில் 200 மாணவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வை கல்லூரி வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் மற்றும் இளைஞர் செஞ்சுலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் J.டேவிட் அய்லிங் ஆகியோர் செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu