மதுக்கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

மதுக்கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
X

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்

நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு மவுன போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காலத்தில், தமிழக அரசு நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அதன் நிர்வாகிகள் தங்களுடைய வீட்டின் முன்பு கண்டன மவுன ஆர்பாட்டத்தில் ஈடுபட கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்து இருந்தது

இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி மௌன போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்