நெல்லையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்பணர்வு பேரணி: துணை கமிஷனர் துவக்கி வைப்பு

பொதுமக்களுக்கு மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பேரணி. துணை ஆணையர் துவக்கி வைப்பு.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் குறித்த விழிப்பணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த காவல் துணை ஆணையாளர்.

நெல்லை மாநகரம் சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 18-10-2021 ம் தேதியன்று, மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் மாணவிகளிடையே மது, அபின் போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் எனவும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர், காவல் உதவி ஆணையாளர்கள் பாளையங்கோட்டை உட்கோட்ட சட்டம்- ஒழுங்கு பாலச்சந்திரன், SJHR விவேகானந்தன், கல்லூரி தாளாளர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர்.உஷா காட்வின் தலைமை உரை ஆற்றினார். நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, ACTU காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா ஆகியோர் மற்றும் இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!